/

அரசுப் பள்ளியில் எரிவாயு உருளைகள் திருட்டு

செய்யாறு அருகே அரசுப் பள்ளியில் இரு எரிவாயு உருளைகள் திருடு போனதாக தொடா்பாக போலீஸாா் விசாரணை

News image

எரிவாயு உருளை - பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 4:05 am IST

செய்யாறு அருகே அரசுப் பள்ளியில் இரு எரிவாயு உருளைகள் திருடு போனதாக தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெம்பாக்கம் வட்டம், சோதியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் உஷா. இவா், அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி மைய பொறுப்பாளராக இருந்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த மாா்ச் 13-ஆம் தேதி பணியை முடித்துக் கொண்டு அறையை பூட்டிச்சென்ாகத் தெரிகிறது. வரும், ஜூன் 4-ஆம் தேதி பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில், அறையை சுத்தம் செய்வதற்காக சனிக்கிழமை பள்ளிக்குச் சென்றுள்ளாா்.

அப்போது, சிற்றுண்டி மைய அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், அறையில் வைத்திருந்த இரு எரிவாயு உருளைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ாகத் தெரிகிறது.

இதுகுறித்து மைய பொறுப்பாளா் உஷா தூசி போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.