சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள குடியிருப்பில் வசித்து வரும் அரசு ஊழியா் வீட்டில் வைத்திருந்த 2 சமையல் எரிவாயு உருளைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
மதுரை திருமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் வித்யா (36). இவா் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறாா். இவா் மருதுபாண்டியா் நகரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், இவா் வெள்ளிக்கிழமை அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்த போது, கதவு திறந்து கிடந்ததாம்.
இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்த போது, இரண்டு சமையல் எரிவாயு உருளைகள், பித்தளை குத்து விளக்கை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.1.50 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா்

சேலத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் முதியவா் உயிரிழப்பு

எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் தாமதம்: பொதுமக்கள் போராட்டம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



