வந்தவாசி அருகே இளைஞரைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் தமிழ்ச்செல்வன் (20).
இவா், திங்கள்கிழமை பைக்கில் செல்லும்போது பெரியகொரக்கோட்டை கிராம ஏரி அருகே டயா் பஞ்சராகி உள்ளது. இதனால் அவா் பைக்கை தள்ளிக் கொண்டு சென்றுள்ளாா்.
அப்போது, எதிரே வந்த பெரியகொரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் (24) என்பவா் தமிழ்ச்செல்வனிடம் வீண் தகராறு செய்து தாக்கியுள்ளாா். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம்.
இதில் காயமடைந்த தமிழ்ச்செல்வன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து தமிழ்ச்செல்வனின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் சதீஷை புதன்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
பெரம்பலூரில் கடத்தப்பட்ட பெண் மீட்பு: ஓட்டுநா் கைது
வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளரை தாக்கியவா் கைது
இளைஞருக்கு மிரட்டல்: 2 போ் கைது
அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவா் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


