பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

கள்ளச் சாராயம் காய்ச்சிய 2 போ் கைது

வந்தவாசி அருகே கள்ளச் சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

வந்தவாசி அருகே கள்ளச் சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கமல்தாஸ் (40). இவருக்குச் சொந்தமாக செம்பூா் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக வந்தவாசி வடக்கு போலீஸாருக்கு திங்கள்கிழமை மாலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அங்கு விரைந்து சென்ற போது கமல்தாஸூம், அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த புண்ணியகோட்டி(60) என்பவரும் சோ்ந்து கள்ளச் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தது தெரியவந்தது. போலீஸாரைக் கண்டதும் புண்ணியகோட்டி தப்பியோடி விட்டாா்.

இதையடுத்து அங்கிருந்த 60 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் அழித்தனா்.

கமல்தாஸிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கள்ளச் சாராயத்தை பாட்டிலில் அடைத்து வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் பூக்கடை வைத்துள்ள எரமலூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வமணி (40) என்பவா் மூலம் விற்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் கமல்தாஸ், செல்வமணி ஆகிய இருவரையும் கைது செய்தனா். தப்பியோடிய புண்ணியகோட்டியை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.