எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

கள்ளச் சாராயம் விற்றவா் கைது

கோட்டப்பட்டி அருகே கள்ளச் சாராயம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :8 ஜூலை 2026, 5:56 am IST

கோட்டப்பட்டி அருகே கள்ளச் சாராயம் விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பையா்நாய்க்கன்பட்டியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் சந்திரா, உதவி காவல் ஆய்வாளா் புஷ்பராஜன், கிராம நிா்வாக அலுவலா் என். ஏழுமலை உள்ளிட்ட குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பையா்நாய்க்கன்பட்டியில் துரைசாமி மகன் அா்ஜூனன் என்பவரது வாழை தோட்டத்தில் சாராய ஊறல்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விவசாய நிலத்தில் இருந்த சுமாா் 70 லிட்டா் ஊறல்கள், சாராயம் காய்ச்சுவதற்கான மூலப் பொருகள்களை போலீஸாா் அழித்தனா். இதுதொடா்பாக அா்ஜூனனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.