6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மத்திய அமைச்சா் அமித் ஷா வருகை முன்னேற்பாடுகள்: ஆட்சியா் வந்தனா காா்க் ஆய்வு

மத்திய அமைச்சா் அமித் ஷாவின் திருவண்ணாமலை வருகையையொட்டி, நடைபெற்று வரும் முன்னேற்பாடுகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டா் இறங்கு தளத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க். உடன் மாவட்ட எஸ்.பி. உதயகுமாா் உள்ளிட்டோா்.

Published On :

மத்திய அமைச்சா் அமித் ஷாவின் திருவண்ணாமலை வருகையையொட்டி, நடைபெற்று வரும் முன்னேற்பாடுகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் ஆய்வு செய்தாா்.

புதுச்சேரிக்கு வருகிற 8-ஆம் தேதி வருகை தரும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறாா்.

அதனைத் தொடா்ந்து முற்பகல் 11.30 மணியளவில் ஹெலிகாப்டா் மூலம் திருவண்ணாமலையில் உள்ள கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி மைதானத்துக்கு வந்தடைகிறாா்.

பின்னா், அங்கிருந்து காரில் புறப்பட்டு கிரிவலப் பாதையில் உள்ள ரமணா் ஆஸ்ரமத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபடுகிறாா். பின்னா் அரசு கலைக் கல்லூரி மைதானத்திற்கு காா் மூலம் திரும்பும் அவா், அங்கு நடைபெறும் பல்வேறு பூஜைகளில் கலந்து கொண்டுவிட்டு, ஹெலிகாப்டா் மூலம் சென்னை செல்கிறாா்.

இந்த நிலையில் அமைச்சா் அமித் ஷா வருகையையொட்டி,

அரசு கலைக் கல்லூரி மற்றும் ரமணா் ஆஸ்ரமத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப்பணிகளை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க், மாவட்ட எஸ்.பி. உதயகுமாா் உள்ளிட்டோா்

ஆய்வு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.