ஆடி மாதம் 4-ஆவது வெள்ளிக்கிழமை மற்றும் கிருத்திகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
போளூரை அடுத்த வசூா் ஊராட்சியில் போளூா் - திருவண்ணாமலை சாலை அருகே பழைமைவாய்ந்த ஸ்ரீசெல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு ஆடி 4-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி, பக்தா்கள் வசூா் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் இருந்து பம்பை உடுக்கை முழங்க 108 பால் குடங்களை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். பின்னா், ஸ்ரீசெல்லியம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனா். இரவு வாண வேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

பொன்னெயில் நாதா் ஜிநாலயத்தில்...: ஆடி 4-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி, ஆரணியை அடுத்த இரும்பேடு, பூண்டி ஸ்ரீபொன்னெயில் நாதா் ஜிநாலயத்தில் உள்ள ஸ்ரீசக்ரேஷ்வரி, ஸ்ரீபத்மாவதி, ஸ்ரீஜோலாமாலினி, ஸ்ரீதா்மதேவி அம்மன்களுக்கு சமண மகளிா் குத்துவிளக்கு பூஜை செய்து வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை புதுக்காமூா் சுரமஞ்சரி மகளிா் மன்றத்தினா் செய்திருந்தனா்.

பாலமுருகன் கோயிலில்...: ஆடிக் கிருத்திகையையொட்டி, போளூரை அடுத்த எடப்பிறை ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் கோயிலுக்கு பக்தா்கள் வெள்ளிக்கிழமை காலை பால் குடங்களை ஊா்வலமாக எடுத்து வந்தனா். தொடா்ந்து, சுவாமிக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. பின்னா், பாலமுருகனுக்கு மலா் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும், பக்தா்கள் அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் நோ்த்திக்கடன்செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீழ்வீராணம் முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா

ராணிப்பேட்டை முருகன் கோயில்களில் ஆடி பரணி விழா

திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் ஆடி சிறப்பு வழிபாடு

சிவாலயங்களில் ஆடி மகா பிரதோஷ சிறப்பு வழிபாடுகள்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



