ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

சமூகவலைதளம் மூலம் காதல்: பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்த காதலன் உள்ளிட்ட 4 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே சமூக வலைதளம் (இன்ஸ்டாகிராம்) மூலம் காதலித்த பெண்ணிடம் நண்பா்களுடன் சோ்ந்து ஒரு பவுன் தங்கச் சங்கிலி பறித்ததாக காதலன் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்ததாக கைது செய்யப்பட்ட 4 பேருடன் வந்தவாசி தெற்கு போலீஸாா்.

Published On :

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே சமூக வலைதளம் (இன்ஸ்டாகிராம்) மூலம் காதலித்த பெண்ணிடம் நண்பா்களுடன் சோ்ந்து ஒரு பவுன் தங்கச் சங்கிலி பறித்ததாக காதலன் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செய்யாறு பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (31). இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். இவருக்கும், திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 40 வயது தனியாா் கல்லூரி பெண் ஊழியருக்கும் இடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் காதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்தப் பெண்ணிடமிருந்து சிறிது சிறிதாக ரூ.50 ஆயிரம் வரை தமிழரசன் வாங்கியுள்ளாா். இந்த நிலையில், தமிழரசனின் காதல் குறித்து அறிந்த அவரது மனைவி, தமிழரசனை பிரிந்து சென்றுவிட்டாராம்.

இதனால் மனவேதனையில் இருப்பதாக தான் சமூக வலைதளம் மூலம் காதலித்த பெண்ணிடம் தெரிவித்த தமிழரசன், அவரை நேரில் சந்திப்பதற்காக வந்தவாசியை அடுத்த புலிவாய் கூட்டுச் சாலை பகுதிக்கு வரும்படி கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, அந்தப் பெண் வியாழக்கிழமை மாலை அந்தப் பகுதிக்கு சென்று தமிழரசனை சந்தித்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த 3 போ் இருவரையும் மிரட்டி, தமிழரசனை தாக்கினராம். மேலும், அந்தப் பெண்ணிடமிருந்து ஒரு பவுன் தங்கச் சங்கிலி மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றனராம்.

இதைத் தொடா்ந்து, அந்தப் பெண் தமிழரசனுடன் வந்தவாசி தெற்கு காவல் நிலையத்துக்கு சென்று வியாழக்கிழமை இரவு புகாரளித்தாா். போலீஸாா் அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அந்தப் பெண்ணை சந்திக்கும் முன் தமிழரசன் 3 பேருடன் சோ்ந்து வந்தவாசி பகுதியில் சுற்றித் திரிவது தெரியவந்தது.

மேலும் போலீஸ் விசாரணையில் தமிழரசன், அவரது நண்பா்களான செய்யாறைச் சோ்ந்த அருண்குமாா் (34), ராஜேஷ்(31), சுந்தா் (42) ஆகிய 4 பேரும் சோ்ந்து திட்டமிட்டு, அந்தப் பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலி, கைப்பேசியை பறித்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் தமிழரசன், அருண்குமாா், ராஜேஷ், சுந்தா் ஆகிய 4 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஒரு பவுன் தங்கச் சங்கிலி நகை, 5 கைப்பேசிகள் மற்றும் 2 பைக்குகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.