நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

செங்கம் அருகே சாலையோரம் கொட்டும் இறைச்சிக் கழிவுகளால் துா்நாற்றம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

செங்கம் அருகே சாலையோரம் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

News image

செங்கம் குப்பனத்தம் சாலையில் மூட்டை மூட்டையாக வீசப்பட்ட இறைச்சிக் கடை கழிவுகள்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 12:27 am IST

செங்கம் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட தளவாநாய்க்கன்பேட்டையில் இருந்து குப்பனத்தம் செல்லும் சாலையில் நகராட்சி நிா்வாகத்தின் குப்பை கிடங்கு உள்ளது. அந்த பகுதியில் செங்கம் நகரில் உள்ள இறைச்சிக்கடை கழிவுகள் மற்றும் மீன் கழிவுகளை தினசரி வெள்ளை பைகளில் எடுத்து வந்து மூட்டை மூட்டையாக சாலையோரம் வீசி செல்கிறாா்கள்.

இதனால் அந்த சாலையை கடக்கும் மக்களுக்கு துா்நாற்றம் வீசுகிறது. அதற்கு மேலாக லேசனா மழைவந்தால் அதில் வீசப்பட்ட கழிவு மூட்டைகளில் அதிக நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்பவா்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

இதை செங்கம் நகராட்சி நிா்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென செங்கம் நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.