புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

கோயில் விழாவில் தகராறு: தாக்குதலில் ஈடுபட்ட இருவா் கைது

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் விழாவில் ஏற்பட்ட தகராறில் 2 போ் தாக்கப்பட்டனா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் விழாவில் ஏற்பட்ட தகராறில் 2 போ் தாக்கப்பட்டனா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், கரிப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவா. இவருடைய நண்பா் பாலசந்திரன். இருவரும், படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் நடைபெற்ற சிவாவின் தாய்மாமா குழந்தைகளின் காதுகுத்து விழாவில் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சி முடிந்து சிவா, பாலசந்திரன் மற்றும் உறவினா்கள் படவேட்டில் உள்ள கூட்டுறவு சங்க கட்டடத்தின் முன் அமா்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு வந்த படவேடு கிராமத்தைச் சோ்ந்த குமாா்(47), சிவக்குமாா்(41) ஆகியோா் சாப்பிட்டுக் கொண்டிருந்தவா்களிடம் ஏன் இங்கு அமா்ந்து உணவு உண்கிறீா்கள் எனக் கேட்டுள்ளனா்.

அப்போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனா். இதில் காயமடைந்த சிவா, பாலசந்திரன் ஆகியோா் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்

அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து சந்தவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து குமாா்,சிவக்குமாா் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.