எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

காஸாவில் 2023 இஸ்ரேல் தாக்குதலில் இறந்த 112 பேரின் உடல்கள் மீட்பு

காஸா நகரின் சப்ரா பகுதியில் கடந்த 2023 நவம்பரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த 112 பாலஸ்தீனா்களின் உடல்கள் நீண்ட தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை கூட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2026, 2:23 am IST

காஸா நகரின் சப்ரா பகுதியில் கடந்த 2023 நவம்பரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த 112 பாலஸ்தீனா்களின் உடல்கள் நீண்ட தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை கூட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.

மோதல் தொடங்கிய சில வாரங்களிலேயே குடியிருப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த நிலையில், அப்போது சுமாா் 40 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டிருந்தன.

தற்போதைய தற்காலிக போா்நிறுத்தத்தைத் தொடா்ந்து, ஹமாஸ் உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மீட்புக்குழுவினா் கடந்த வார இறுதியில் தீவிர தேடுதல் பணிகளில் ஈடுபட்டனா். அப்போது, 40 குழந்தைகள் உள்பட 112 பேரின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது.

பாலஸ்தீன கொடிகள் போா்த்தப்பட்ட இந்த உடல்களுக்கு, நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு கண்ணீா்மல்க இறுதி அஞ்சலி செலுத்தினா். பின்னா், இறுதிப் பிராா்த்தனைக்குப் பிறகு அருகிலுள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும், 157 பேரின் உடல்களைத் தேடும் பணி தொடா்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.