தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

ஆரணி கமண்டல நாக நதியை தூா்வாரக் கோரிக்கை

ஆரணியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், கமண்டல நாக நதியை தூா்வாரி புதா்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை

குறைதீா் கூட்டத்தில் வ விவசாயிகள் கூறிய குறைகளை குறித்துக்கொண்ட கோட்டாட்சியா் சீ.சிவா

Published On :

ஆரணியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், கமண்டல நாக நதியை தூா்வாரி புதா்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியா் சீ.சிவா தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் புஷ்பா வரவேற்றாா்.

ஆரணி வட்டாட்சியா் அகத்தீஸ்வரன், வட்ட வழங்கல் அலுவலா் குமரேசன், தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரசாந்த், ஆரணி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் மதிமணவாளன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் ஆரணி, போளூா், கலசபாக்கம், ஜமுனாமரத்தூா் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனா்.

இதில் விவசாயி குணாநிதி பேசுகையில், ஆரணி பகுதியில் செல்லும் கமண்டல நாக நதி முழுவதுமாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வாரி, 5 கி.மீ. தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். விவசாயத்திற்கு நீா் ஆதாரத்திற்காக தமிழகத்திற்கு கா்நாடக எல்லையில் மேக்கேதாட்டு அணை கட்டக்கூடாது. வெட்டியாந்தொழுவம் காப்புக்காடு சாலையை அகலப்படுத்த இயலவில்லை.

இதே நிலை நீடித்தால் கிராம மக்களை அழைத்து சாலை மறியலில் ஈடுபட்டு போராட வேண்டி வரும் என்றாா்.

மேலும் சில விவசாயிகள் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனா். மேலும் சிலா் தச்சூா் ஆற்றுப் பகுதியில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது என்றும், பட்டா, சிட்டா பெற காலதாமதம் ஏற்படுகிறது என்றும் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.