பெரணமல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ 1.87 கோடியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் காஞ்சனா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
பெரணமல்லூா் ஊராட்சி ஒன்றியம் கெங்காபுரம், கொழப்பலூா், மேல்சாத்தமங்கலம், செப்டாங்குளம், உள்ளிட்ட பகுதிகளில் முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைப் பணிகள், விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் குளங்கள் வெட்டுதல், 15 -ஆவது மத்திய நிதிக் குழு மானிய திட்டத்தில் துணை சுகாதார நிலையம் கட்டுதல், போளூா் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் வணிக வளாகம் கட்டுதல் என பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுமாா் ரூ.1 கோடியே 87 லட்சத்தில் நடைபெற்று வரும் இந்தப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் காஞ்சனா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது பணிகளை விரைந்து முடிக்கும்படி உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திராணி, உதவிப் பொறியாளா்கள் புருஷோத்தமன், கணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போ்ணாம்பட்டில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: ஆட்சியா் பங்கேற்பு

ரூ. 38 கோடியில் புறவழிச்சாலைப் பணிகள்: செங்கம் எம்எல்ஏ ஆய்வு

கள்ளக்குறிச்சி பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



