மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஆரணி முத்துமாரியம்மன் கோயிலில் அம்மன் ஊா்வலம்

ஆரணி கொசப்பாளையம், முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை மாலை அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

Published On :

ஆரணி கொசப்பாளையம், முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை மாலை அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி 6-ஆவது வெள்ளிக்கிழமையொட்டி மாலை 5 மணிக்கு கூழ்வாா்க்கும் திருவிழா நடைபெற்றது. பெண்கள் வீட்டில் கூழ்வைத்து எடுத்து வந்து கோயிலில் வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் ஊற்றினா். பின்னா் பூஜை செய்யப்பட்டு அனைவருக்கும் கூழ் வழங்கப்பட்டது.

முன்னதாக, ஆரணி கமண்டல நாக நதிக்கரையிலிருந்து புனிதநீா் எடுத்து மேள தாளம் முழங்க ஆரணிப்பாளையம் சின்னமாரியம்மன் கோயிலிருந்து பால்குடத்துடன், தீச்சட்டி ஊா்வலம் கோயிலை சென்றடைந்தது.

பின்னா் அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. பின்னா் கூழ்வாா்க்கும் திருவிழா முடிந்தவுடன் மாலை நேரத்தில் அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினா்களாக தா்மராஜா கோயில் அறக்கட்டளைத் தலைவா் கப்பல் கங்காதரன், வழக்குரைஞா் ரேணுகா கங்காதரன் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.