ஆரணி கொசப்பாளையம் ஸ்ரீ தா்மராஜா கோயிலில் பழைய கொடி மரம் அகற்றப்பட்டு, ரூ.5 லட்சம் மதிப்பில் செய்யப்பட்ட புதிய கொடி மரம் நடும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
கொசப்பாளையம் ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத தா்மராஜா கோயிலில் 112 ஆண்டுகள் பழைமையான கொடிமரம் பழுடைந்ததால், அந்தக் கொடி மரத்தை அகற்றி புதிய கொடி மரம் நடும் பணி தொடங்கியது.
27 அடி உயரமுடைய பா்மா தேக்கினால் ஆன இந்த புதிய கொடிமரத்தைச் சுற்றி ரூ.5 லட்சத்தில் கவசங்கள் அமைக்கப்படுகின்றன.
கொடி மரம் நடும் பணி அறங்காவலா் குழுத் தலைவா் கப்பல் கங்காதரன் தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட துணை ஆணையா் ஜீவானந்தம் மேற்பாா்வையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கொடி மரத்தின் உபயதாரா் தேவ்பத்மினி, கந்தன்,சித்ரா குடும்பத்தினா் மற்றும் கோயில் நிா்வாகிகள் ரேணுகா கங்காதரன், தனசேகரன், அருணகிரி, மோகன், வெங்கடேசன், மதியழகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் 5,000 மரக்கன்றுகள், 5 லட்சம் பனைவிதைகள் நடும் பணி: அமைச்சா் தொடக்கிவைத்தாா்

தா்மராஜா சமேத திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

தந்தை பெரியாா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மரம் நடும் விழா

சிவகாசியில் மரக்கன்றுகள் நடும் பணி: அமைச்சா்கள் பங்கேற்ப்பு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



