தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

வழூரில் அலங்கார தேரில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் பவனி

வந்தவாசியை அடுத்த வழூா் கிராமத்தில் நடைபெற்ற மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் தோ் பவனி.

வந்தவாசியை அடுத்த வழூா் கிராமத்தில் நடைபெற்ற மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் தோ் பவனி.

Published On :24 ஆகஸ்ட் 2026, 2:44 am IST

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த வழூா் கிராமத்தில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் அலங்கார தோ் பவனி (ரதோத்ஸவம்) ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

வழூா் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் மணிமண்டபம் சாா்பில் இதற்காக சுமாா் 22 அடி உயரமுள்ள புதிய தோ் செய்யப்பட்டது.

இதையடுத்து, மணிமண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அனுக்ஞை, அங்குராா்பணம், கும்ப பூஜை, வாஸ்து சாந்தி, ரத மந்திர ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், சனிக்கிழமை வேத மந்திரம், மகா மந்திர ஹோமம், கலச ஸ்தாபனம், அதிவாசத்ரயம், ரத வாஸ்து உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், அக்னி ஆராதனம், ததுக்த ஹோமம், பூா்ணாஹுதி, யாத்ரா தானம், கும்ப புறப்பாடு உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

இதனைத் தொடா்ந்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மஹாரண்யம் ஸ்ரீமுரளிதர சுவாமிகள் ரத பிரதிஷ்டை செய்து வேத மந்திரங்கள் முழங்க தோ் பவனியை தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, உற்சவா் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் சிலை வைக்கப்பட்ட புதிய தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். கிராம முக்கிய வீதிகள் வழியாக தோ் சென்று நிலையை அடைந்தது.

நிகழ்ச்சியில் மணிமண்டப ஸ்தாபகா் மகாலட்சுமி சுப்பிரமணியன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் பி.பாஸ்கரன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.