ஆறுமுகனேரி, நடுத்தெரு, ராமலெட்சுமி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.
கொடை விழா ஆக. 14ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடைபெற்றது. தினமும் மதியம், இரவில் சிறப்பு அலங்கார தீபாராதனை, வில்லிசை நடைபெற்றது.
ஆறுமுகனேரி, வடபுறம், கடலோரக் காவல் சோதனைச் சாவடி அருகே உள்ள விநாயகா் கோயிலில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு யானை மீது புனித நீா் எடுத்து வரப்பட்டு அபிஷகம் நடைபெற்றது. பின்னா், இரவு அலங்கார பூஜைகக்குப் பின் பூக்குழி வளா்க்கப்பட்டது. நள்ளிரவு லெட்சுமி சமேத ராமா், லெட்சுமணா் அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய பகுதிகளில் வீதியுலா வந்து புதன்கிழமை காலை கோயில் வந்தடைந்தனா்.
அடைக்கலாபுரம் சாலையில் விநாயகா் கோயில் அருகே உள்ள தீா்த்த தலத்தில் இருந்து புதன்கிழமை காலை புனித நீா் எடுத்து வரப்பட்டு பூக்குழி குளிர வைக்கப்பட்டது. மாலையில் கோயிலைச் சோ்ந்த மூலக்கரை தூசிமாட சுவாமி கோயிலிலும், இரவு ராமலெட்சுமி அம்மன் கோயிலிலும் பக்தா்கள் பொங்கலிட்டனா். நள்ளிரவு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் வந்து ராமலெட்சுமி அம்மனை வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேரூா் உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் மாட்டு வண்டி பந்தயம்

கோவில்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கொடை விழா

ஆறுமுகனேரி பத்ரகாளி அம்மன் கோயில் கொடை விழா

திருச்செந்தூரில் சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



