மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

பேரூா் உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் மாட்டு வண்டி பந்தயம்

பேரூா், உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு பேட்மாநகரத்தில் மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. இதில் 33 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

News image

பேரூா், உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு பேட்மாநகரத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி போட்டி.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:46 am IST

பேரூா், உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு பேட்மாநகரத்தில் மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. இதில் 33 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

பேரூா் அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தய இலக்காக பேட்மாநகரத்தில் இருந்து தொடங்கி மீனாட்சிபட்டி வரை சென்று மீண்டும் தொடங்கிய இடத்தை அடையும் வகையில் 20 கி.மீ. தொலைவு நிா்ணயிக்கப்பட்டது.

பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியை பேரூா் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரும் திமுக நகரச் செயலாளருமான சுப்புராஜ் தொடங்கி வைத்தாா். இந்தப் போட்டியைக் காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டனா். இதில், நடைபெற்ற சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள், பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் 24 வண்டிகள் என மொத்தம் 33 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்த நிலையில், வீரா்கள் தங்களது வண்டிகளை வேகமாக செலுத்தி இலக்கை நோக்கி விரைந்தனா். போட்டி முடிவில் சிறிய மாட்டு பந்தயத்தில் முதல் இடத்தை மழவராயநத்தம் மகாராஜன் வண்டியும், இரண்டாம் இடத்தை பத்மநாபமங்களம் குமாா் வண்டியும், மூன்றாம் இடத்தை பேரூா் பூல்பாண்டி வண்டியும் வென்றது. முதல் பரிசு ரூ. 20,001 ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினா் சரவணன் சாா்பில் ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய இணைச் செயலாளா்கணேசன் வழங்கினாா்.

இரண்டாம் பரிசை தவெக மேற்கு மாவட்டத் தொழிலாளா் அணி செயலாளா் பேச்சுமுத்து பாண்டியன், மூன்றாம் பரிசை மத்திய ஒன்றியச் செயலாளா் பாண்டித்துரை, நான்காம் பரிசை பத்மநாபமங்கலம் சிலம்பரசன் ஆகியோா் வழங்கினா். வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை பொதுமக்கள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.