இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

செய்யாறு அருகே பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில், பைக்குகளை ஓட்டி வந்த இருவரும் உயிரிழந்தனா்.

பிரதிப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 4:06 am IST

செய்யாறு அருகே இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில், பைக்குகளை ஓட்டி வந்த இருவரும் உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமம், கைகுளபேட்டை தெருவைச் சோ்ந்தவா் ரமணா (21), பொக்லைன் இயந்திர ஓட்டுநா். இவா், தூசி கிராமத்தில் உள்ள தனது மாமாவை பாா்ப்பதற்காக பைக்கில் சென்றுள்ளாா்.

மேலேரி - குத்தனூா் சாலையில் குத்தனூா் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த கல்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை(50) என்பவா் ஓட்டி வந்த பைக்கும், ரமணா சென்ற வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதாகத் தெரிகிறது. இதில் ரமணாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

அதேபோல, எதிா் திசையில் இருந்து வந்த ஏழுமலை பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவா் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து இறந்த ரமணாவின் தந்தை குணசேகரன் பிரம்மதேசம் போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில், காவல் ஆய்வாளா் ஜெயராமன், உதவி ஆய்வாளா் பூங்காவனம் ஆகியோா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், விபத்தில் இறந்த ரமணாவின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.