உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

இரு சக்கர வாகனங்கள் மோதல்: 3 போ் காயம்

செய்யாறு அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

Published On :14 ஜூலை 2026, 12:10 am IST

செய்யாறு அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், பெரும்புலிபாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் நேதாஜி (23). இவா், தனது நண்பரான கோகுல் என்பவரை அழைத்துக் கொண்டு, திருச்செந்தூா் கோயிலுக்குச் செல்வதற்காக பைக்கில் சனிக்கிழமை மாலை புறப்பட்டுள்ளாா்.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாமண்டூா் கிராமம் அருகே சென்றபோது, எதிா் திசையில் இருந்து வந்த பைக்கும் நேதாஜியின் பைக்கும் மோதிக் கொண்டன. இதில் நேதாஜி, கோகுல் மற்றும் மற்றோரு பைக்கில் வந்த முத்துசரவணன் பலத்த காயமடைந்தனா்.

மூவரும் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து நேதாஜி தூசி போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.