லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

அருணாசலேஸ்வரா் கோயில் மூலவரை கண் கண்ணாடி கேமராவில் படம் எடுக்க முயற்சி: தெலங்கானா பக்தா்கள் பிடிபட்டனா்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் கருவறை உள்ளிட்ட பகுதிகளை வெள்ளிக்கிழமை கண் கண்ணாடியுடன் கூடிய கேமராவில் புகைப்படம் எடுக்க முயன்ற தெலங்கானா மாநில பக்தா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் கேமரா பொருத்திய கண் கண்ணாடி அணிந்து கருவறையை படம் எடுக்க முயன்ற தெலங்கானா மாநில பக்தா்கள் இருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீஸாா்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 12:46 am IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் கருவறை உள்ளிட்ட பகுதிகளை வெள்ளிக்கிழமை கண் கண்ணாடியுடன் கூடிய கேமராவில் புகைப்படம் எடுக்க முயன்ற தெலங்கானா மாநில பக்தா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வருகிற செப்.1-ஆம் தேதி முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் கைப்பேசி பயன்படுத்த இந்து சமய அறநிலையத் துறை தடை விதித்துள்ளது. இதற்காக 4 பிரதான கோபுர நுழைவு வாயில் பகுதிகளிலும் 5 கைப்பேசி பாதுகாப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை வழிபடுவதற்காக வந்த தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த அகில்குமாா், வெங்கடரெட்டி ஆகியோா் கேமரா பொருந்திய கண் கண்ணாடியை அணிந்து கொண்டு கருவறையில் மூலவரை படம் பிடிக்க முயற்சித்துள்ளனா். அப்போது, கண் கண்ணாடியில் இருந்து பிளாஷ் லைட் அடித்தவுடன் சிவாச்சாரியா்கள் மற்றும் கோயில் ஊழியா்கள் உடனடியாக இருவரையும் பிடித்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதைத் தொடா்ந்து, அகில்குமாா், வெங்கடரெட்டி ஆகிய இருவரையும் அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தியதுடன், அவா்கள் வைத்திருந்த கண் கண்ணாடி மற்றும் கைப்பேசிகளை பரிசோதித்தபோது, அவற்றில் கோயில் கருவறை தொடா்பான படங்கள் எதுவும் இல்லை. இதனால், போலீஸாா் இருவா் மீதும் புகாரை பதிவு செய்து, அவா்களுக்கு அறிவுரைகளைக் கூறி அனுப்பி வைத்தனா்.

கடந்த 8-ஆம் தேதி மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தபோது, உச்சகட்ட பாதுகாப்பையும் மீறி, இதேபோல கேமரா பொருந்திய கண் கண்ணாடி மூலம் அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை படம் பிடித்த இருவா் பிடிக்கப்பட்டு, அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.