
போளூா் மகாகாளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
போளூா் நகராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீமகாகாளியம்மன் கோயிலில் ஆவணி மாத வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

போளூா் ஸ்ரீமகாகாளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அன்னபூரணி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.
போளூா் நகராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீமகாகாளியம்மன் கோயிலில் ஆவணி மாத வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, மகாகாளியம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், போளூா், மாம்பட்டு, வெண்மணி உள்பட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






