நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

வெள்ளக்கோவில் பகுதியைச் சுற்றியுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

வெள்ளக்கோவில் பகுதி அம்மன் கோயில்களில் ஆடிப்பூரம், ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

மயில்ரங்கம் தையல் நாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற குத்து விளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 3:52 am IST

வெள்ளக்கோவில் பகுதி அம்மன் கோயில்களில் ஆடிப்பூரம், ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதிகாலை முதலே கோயில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், தயிா், இளநீா், சந்தனம், மஞ்சள், பன்னீா் உள்பட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

அதைத்தொடா்ந்து சிறப்பு மலா் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஆடிப்பூர நாளின் சிறப்பம்சமாக அம்மனுக்கு வண்ண வண்ண கண்ணாடி வளையல்களால் ‘வளையல் அலங்காரம்’ செய்யப்பட்டது. வழிபாட்டுக்குப் பிறகு, கோயிலுக்கு வந்திருந்த சுமங்கலிப் பெண்களுக்கு பிரசாதமாக வளையல்கள் வழங்கப்பட்டன. குத்து விளக்கு பூஜைகள் நடத்தப்பட்டு அம்மனின் அருள்பிரசாதமாக ஆடி கூழ் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

வெள்ளக்கோவில்-கரூா் சாலையில் உள்ள திருமலை அம்மன், செல்லாண்டி அம்மன், மூலனூா் சாலை மாகாளி அம்மன், மயில்ரங்கம் தையல் நாயகி அம்மன் உள்பட பல்வேறு கோயில்களில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.