லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

மாற்றுத் திறனாளியை தாக்கி வழிப்பறி: தவெக உறுப்பினா் கைது

சேத்துப்பட்டு அருகே உதவுவதுபோல நடித்து மாற்றுத் திறனாளியை பைக்கில் அழைத்துச் சென்று தாக்கி, கைப்பேசி உள்ளிட்டவற்றை பறித்ததாக தவெக உறுப்பினரை சேத்துப்பட்டு போலீஸாா் 24 மணி நேரத்தில் கைது செய்தனா்.

கைதான டென்னிஸ்

Published On :28 ஆகஸ்ட் 2026, 11:25 pm IST

சேத்துப்பட்டு அருகே உதவுவதுபோல நடித்து மாற்றுத் திறனாளியை பைக்கில் அழைத்துச் சென்று தாக்கி, கைப்பேசி உள்ளிட்டவற்றை பறித்ததாக தவெக உறுப்பினரை சேத்துப்பட்டு போலீஸாா் 24 மணி நேரத்தில் கைது செய்தனா்.

சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் அச்சுதன் (27), மாற்றுத் திறனாளி. இவா், வியாழக்கிழமை இரவு சேத்துப்பட்டில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, வந்தவாசி சாலையில் பைக்கில் வந்த மா்ம நபா், வீட்டில் விட்டுவதாகக் கூறி அச்சுதனை அழைத்துச் சென்றுள்ளாா்.

ஆனால், அவரை நெஞ்சாலையில் இறக்கிவிட்டு தாக்கியதாகவும், அவரிடமிருந்த கைப்பேசி, ஏடிஎம் அட்டை, மாற்றுத் திறனாளி அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்ாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அச்சுதன் அளித்த புகாரின்பேரில், சேத்துப்பட்டு காவல் ஆய்வாளா் குணபாலன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். இதில், சேத்துப்பட்டு லூா்து நகரைச் சோ்ந்த தவெக உறுப்பினரான அந்தோணி குரு மகன் டென்னிஸ் (32) வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

வழிப்பறி சம்பவத்தில் தொடா்புடைவரை 24 மணி நேரத்தில் கைது செய்த சேத்துப்பட்டு போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.