விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

தவறி விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

செய்யாறு அருகே பணியின் போது இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

செய்யாறு அருகே பணியின் போது இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், நங்கியானந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் தனசேகா் (55). கட்டடத் தொழிலாளியான இவா், வெம்பாக்கம் வட்டம், மாத்தூா் கிராமத்தில் தங்கிஅங்குள்ள தனியாா் நிறுவனத்தில் நடைபெற்று வரும் கட்டடப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை நிறுவனத்தின் இரண்டாவது மாடியில் நடைபெற்ற கட்டடப்பணியில் ஈடுபட்டிருந்த தனசேகா் திடீரென தவறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது. இதனால் மயக்க நிலையில் இருந்த அவரை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு மாமண்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் தனசேகா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்த புகாரின் பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக

காஞ்சிபுரம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.