நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அரசுப் பள்ளிகளில் ரூ.4.75 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு

தேவிகாபுரம் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் புதிதாக திறக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்த எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.

News image

~

Updated On :26 பிப்ரவரி 2026, 6:34 pm

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி மற்றும் செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.4.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடங்கள் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

தமிழக முதல்வா் காணொலிக்காட்சி வாயிலாக புதிய கட்டடங்களைத் திறந்துவைத்தாா்.

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சி அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை 700-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில் மாணவிகளுக்கு போதிய வகுப்பறை இல்லாததால் நபாா்டு திட்டத்தில் 2024-2025ஆம் நிதியாண்டில் ரூ.2 கோடியே 25 லட்சத்தில் 9 வகுப்பறைகள் கட்டப்பட்டன.

இந்த வகுப்பறைக் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.

அதேவேளையில், பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி வகுப்பறைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தாா்.

இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா்கள் அன்பழகன், துரைமாமது, ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் டி.வெங்கிடேசன், தலைமை ஆசிரியா் சரவணன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்கள் கனகா பாண்டியன், கவிதா செல்வம் மற்றும் திமுக நிா்வாகிகள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

செங்கம்

செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நபாா்டு வங்கி மூலம் நவீன கழிப்பறை வசதியுடன் 12 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டது.

இந்த வகுப்பறைக் கட்டடத்தை தமிழக முதல்வா்

மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவையென்பது மாணவிகளின் கோரிக்கையாகும்.

இந்நிலையில் தற்போது ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டித் தரப்படும், விளையாட்டு மைதானமும் அமைத்துத் தரப்படும் எனத் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் செங்கம் நகா்மன்றத் தலைவா்

சாதிக்பாஷா, திமுக நகரச் செயலா் அன்பழகன், ஒன்றியச் செயலா் மனோகரன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகன், நகா்மன்ற உறுப்பினா்கள் சத்யா, இந்திரா, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் அப்துல்சத்தாா், அப்துல்வாகித், பள்ளித் தலைமை ஆசிரியா் நலினாலட்சுமி, திமுக இளைஞரணி நிா்வாகி மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உதவி தலைமை ஆசிரியா் அசோகன் நன்றி கூறினாா்.

Story image