/

பொத்தகாலன்விளை தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

News image
புதிய வகுப்பறைக் கட்டடங்களைத் திறந்துவைத்த அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.
Updated On :8 மார்ச் 2026, 9:43 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளையில் உள்ள புனித வளனாா் தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூா் கோட்டாட்சியா் கௌதம் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியை பெரியநாயகி வரவேற்றாா். புனித திருக்கல்யாண மாதா திருத்தல அதிபரும் பள்ளித் தாளாளருமான ஜஸ்டின் ஆரம்ப ஜெபம் செய்தாா்.

தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 36 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடங்களைத் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றி, வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தாா். பின்னா், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

விழாவில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வாவாஜி பக்கீா் முகமது, பாலமுருகன், மாநில திமுக வா்த்தகப் பிரிவு துணைச் செயலா் உமரிசங்கா், ஒன்றியச் செயலா்கள் பாலமுருகன் (தெற்கு), ஜோசப் (வடக்கு), பொன்முருகேசன் (மத்தி), மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், ஆழ்வாா்திருநகரி ஒன்றிய முன்னாள் தலைவா் ஜனகா், மாவட்ட வழக்குரைஞா் பிரிவுச் செயலா் செல்வகுமாா், துணை அமைப்பாளா் கிருபாகரன், சாஸ்தாவிநல்லூா் விவசாய நலச் சங்கத் தலைவா் எட்வின் காமராஜ், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் மகேந்திரன், ஐஎன்டியுசி மாநிலப் பொதுச் செயலா் லூா்துமணி, மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் வில்லின் பெலிக்ஸ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் பிச்சிவிளை சுதாகா், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஜோசப் ததேயு ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, முன்னாள் ஊராட்சித் தலைவரும் தெற்கு ஒன்றிய துணைச் செயலருமான திருக்கல்யாணியின் வீட்டுக்கு அமைச்சா் சென்று, அவரது கணவா் சித்திரை சகாயராஜாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தாா்.