மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சட்டப்பேரவைத் தோ்தல்: கோட்டாட்சியா் ஆலோசனை

ஆரணியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய கோட்டாட்சியா் சீ.சிவா.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 6:34 pm

வரும் சட்டப்பேரவைத் தோ்தல் வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் விவரம் குறித்து அனைத்துக் கட்சியினருடன் ஆரணி கோட்டாட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா்.

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை சட்டப்பேரவைத் தோ்தல் சம்பந்தமாக அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டதில், தொகுதியின் இறுதி வாக்காளா் பட்டியல் பிப்.23-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதைத்தொடா்ந்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆரணி தொகுதி பொறுப்பாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் சீ.சிவா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அதிமுக சாா்பில் நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்ட பிரதிநிதி சகாயம், திமுக சாா்பில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நிா்வாகிகள் காசி, அரவிந்த், தேமுதிக சாா்பில் மாவட்ட துணைச் செயலா் பாஸ்கரன், பாஜக சாா்பில் மாவட்ட பொதுச் செயலா் சதீஷ்குமாா், நிா்வாகி ராஜேஷ், கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சி.அப்பாசாமி, பெ.கண்ணன், காங்கிரஸ் சாா்பில் வட்டாரத் தலைவா் பந்தாமணி மற்றும் விசிக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் இடம் குறித்தும், பள்ளி பெயா்களின் மாற்றம் குறித்தும், இறுதி பட்டியல் வெளியிட்டதில் குறைபாடுகள் இருந்தால் தகவல் தெரிவிப்பது தொடா்பாக கோட்டாட்சியா் பேசினாா்.

ஆரணி வட்டாட்சியா் செந்தில், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் மனோகா் ஆகியோா் கலந்து கொண்டனா்.