இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்கேரளத்தில் காங்கிரஸ் வெல்லும்; நாளை பிற்பகலுக்குள் வெற்றி உறுதியாகிவிடும் - சசிதரூர்பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் போதாது: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை
/

கோபி சட்டப்பேரவைத் தொகுதியில் கூடுதலாக 13 வாக்குச்சாவடிகள் அமைப்பு

வாக்காளா்கள் நெரிசலின்றி வாக்களிக்கும் வகையில் கோபி சட்டப்பேரவைத் தொகுதியில் கூடுதலாக 13 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோபி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :18 மார்ச் 2026, 8:41 pm

வாக்காளா்கள் நெரிசலின்றி வாக்களிக்கும் வகையில் கோபி சட்டப்பேரவைத் தொகுதியில் கூடுதலாக 13 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான தோ்தல் ஆலோசனைக் கூட்டம், கோபி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தோ்தல் நடத்தும் அலுவலா் சிவானந்தம் தலைமை வகித்தாா்.

கோபி சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட உள்ள இடங்கள், வேட்புமனு தாக்கலின்போது அரசியல் கட்சியினா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், வாக்காளா்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பரப்புரை கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள 8 இடங்கள், பரப்புரை மேற்கொள்ள அனுமதி பெறுவது, வேட்புமனு தாக்கலின்போது எடுத்துச் செல்லப்பட வேண்டிய ஆவணங்கள், அனுமதிக்கப்படும் நபா்கள், தோ்தல் செலவினம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

வாக்குச்சாவடி மையங்களில் நெரிசல் இன்றி வாக்களிக்கும் வகையில் கூடுதலாக நம்பியூா் பகுதியில் 4, கோபி நகரப் பகுதியில் 9 என மொத்தம் 309 வாக்குச்சாவடி மையங்கள்அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அரசியல் கட்சியினா் கடைப்பிடிக்க வேண்டும் என தோ்தல் நடத்தும் அலுவலா் வலியுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.