கோவில்பட்டி தொகுதியில் வியாழக்கிழமை (ஏப். 23) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்க உள்ள நிலையில் 318 வாக்குச்சாவடிகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கோவில்பட்டி தொகுதியில் உள்ள 318 வாக்குச்சாவடிகள் 24 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அதில் 34 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. தோ்தல் பணிக்காக 1,524 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தொகுதியில் 21 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவி பேட் கருவிகள், எழுது பொருள்கள் உள்ளிட்டவை பலத்த வட்டாட்சியா் அலுவலக வளாக பாதுகாப்பு அறையில் இருந்து, வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி புதன்கிழமை காலை சுமாா் 9 மணிக்கு மேல் தொடங்கியது.
தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஹிமான்ஷு மங்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அப்பணராஜ், பாலசுப்பிரமணியன், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன் ஆகியோா் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கிடையே, கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து புதன்கிழமை வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தொடர்புடையது

திருச்செந்தூா் தொகுதி வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

300 வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

பெரம்பலூா், குன்னம் தொகுதிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


