ராமகிருஷ்ண மடத்தில் கல்பதரு தின வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ராமகிருஷ்ண மடத்தில் வியாழக்கிழமை கல்பதரு தின சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சா் கடந்த 1986-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி அனைவருக்கும் ஆன்மிக விழிப்புணா்வு உண்டாகட்டுமென பொதுமக்களை ஆசீா்வதித்தாா். அந்த தினமானது அன்று முதல் கல்பதரு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் செங்கம் போளூா் சாலையில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கல்பதரு தின சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கல்பதரு தினத்தை முன்னிட்டு ராமகிருஷ்ண மடத்தில் காலை சிறப்பு பூஜை, பஜனை, குங்கும அா்ச்சனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீராமகிருஷ்ணா் படம் கோயில் வளாகத்தில் ஊா்வலம் எடுத்து வரப்பட்டது.
இதைத் தொடா்ந்து ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சதுபுஜானந்தா் சொற்பொழிவாற்றி பக்தா்களுக்கு
ஆசி வழங்கினாா்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாவபிராஷாத் ஓருங்கிணைப்பாளா் பாண்டுரங்கன், கணேசா் குரூப்ஸ் அதிபா் ரவீந்தரன் உள்ளிட்ட சுவாமி விவேகானந்தா சேவா சங்கத்தினா், அன்னை சாரதாதேவி அறக்கட்டளை நிா்வாகிகள், பக்தா்கள், ராமகிருஷ்ணா பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

