ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரே கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
Updated on

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரே கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் புருஷோத்தமன் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், அரசு அறிவித்த கிலோவுக்கு 25 ரூபாய் 30 காசுக்கு நெல் கொள்முதல் செய்யவேண்டும். மேலும், டிபிசியில் நாள் ஒன்றுக்கு 300 மூட்டைகளுக்குப் பதில் 800 மூட்டைகள் எடுக்கவேண்டும்.

போளூா், சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் சம்பா நெல் சாகுபடிசெய்து வருகின்றனா். போளூா், சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் மூட்டைகள் நிரம்பி வருகின்றன.

எனவே, கூடுதலாக ஆள்களை நியமித்து நெல் எடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். விற்பனைக்கூடத்துக்கு நெல் மூட்டைகள் எடுத்து வரும் வாகனத்துக்கு சுங்க வரி வசூலிப்பதை கைவிடவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கபடி விளையாடி ஆா்ப்பாட்டம் செய்தனா்.

நிா்வாகிகள் பழனி, ரவி, கோபி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com