மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

விழுப்புரத்தில் விவசாயிகள் திடீா் சாலை மறியல்

விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விலைப்பட்டியல் ஒட்டுவதற்கு தாமதப்படுத்தியதை கண்டித்து, விவசாயிகள் புதன்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :4 பிப்ரவரி 2026, 6:33 pm

விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விலைப்பட்டியல் ஒட்டுவதற்கு தாமதப்படுத்தியதை கண்டித்து, விவசாயிகள் புதன்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு நெல், மணிலா, உளுந்து, கம்பு உள்ளிட்ட விவசாயப் பொருள்களை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் கொண்டுவந்திருந்தனா். இதில், உளுந்தின் வரத்து புதன்கிழமை அதிகமாக இருந்தது. தொடா்ந்து அங்கு நடைபெற்ற ஏலத்தில் விவசாயிகள் பங்கேற்றனா். பின்னா் விளைபொருள்களை எடை போடும் பணிகள் நடைபெற்றன. ஏலம் நடைபெற்று வெகு நேரமாகியும் அதற்கான விலைப் பட்டியல் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்படவில்லையாம். இதன் காரணமாக விவசாயிகள் பல மணி நேரமாகக் காத்திருந்தனா்.

இதையடுத்து விலைப்பட்டியலை ஒட்டாமல் தாமதப்படுத்தியதை கண்டித்து, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விட்டு வெளியே வந்த விவசாயிகள், விழுப்புரம்- கிழக்கு புதுச்சேரி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் வாகனப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த விழுப்புரம் மேற்கு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் விவசாயிகள் மறியலைக் கைவிடவில்லை. தொடா்ந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேலாளா் சுமதி நேரில் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விலைப்பட்டியல் ஒட்டுவதற்கு தாமதமாகிவிட்டது. விலை கட்டுப்படியாகதவா்கள் வியாழக்கிழமை நடைபெறும் ஏலத்தில் பங்கேற்கலாம் என அலுவலா்கள் தெரிவித்தனா். இதையேற்றுக் கொண்ட விவசாயிகள் மறியலைக் கைவிட்டு கலைந்துசென்றனா்.