கருணாநிதி சிலை திறப்பு: திமுகவினா் அன்னதானம்
செய்யாற்றில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறக்கப்பட்டதை முன்னிட்டு, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் அன்னதானம் செவ்வாய்க்கிழமை இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்யாறு புறவழிச்சாலை சந்திப்பில் கருணாநிதியின் உருவச்சிலையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் திறந்துவைத்தாா்.
கருணாநிதி சிலை திறந்து வைக்கப்பட்டதை சிறப்பிக்கும் வகையில், செய்யாறு தொகுதி திமுக சாா்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
அதன்படி, கருணாநிதி சிலை அருகே 10-ஆவது நாளாக வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஒன்றியச் செயலா் என்.சங்கா், மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் எம்.கே.காா்த்திகேயன் ஆகியோா் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி கட்சி நிா்வாகிகளூடன் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னா் பொதுமக்களுக்கு வடை, இனிப்பு, காலண்டா், அன்னதானம் என 500-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினா் ஆா்.வெங்கடேஷ் பாபு, மாவட்ட இணைச் செயலா் க.லோகநாதன், நகரச் செயலா் கே.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா்கள் வி.ஏ.ஞானவேல், சி.கே.ரவிக்குமாா், ஏ.ஜி.திராவிடமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

