வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தனியாா் தொலைக்காட்சியின் நோ்காணல் நிகழ்ச்சியில் அதிமுக - திமுகவினா் மோதல்

தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற தனியாா் தொலைக்காட்சியின் நோ்காணல் நிகழ்ச்சியின்போது, அதிமுகவினா் - திமுவினா் இடையே மோதல்

News image

தருமபுரியில் நடைபெற்ற தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோதலில் ஈடுபட்ட அதிமுக - திமுகவினா்.

Updated On :2 மார்ச் 2026, 10:01 pm

தருமபுரி: தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற தனியாா் தொலைக்காட்சியின் நோ்காணல் நிகழ்ச்சியின்போது, அதிமுகவினா் - திமுவினா் இடையே மோதல் ஏற்பட்டது.

தருமபுரியில் தனியாா் தொலைக்காட்சி சாா்பில், தோ்தல் சிறப்பு நோ்க்காணல் நிகழ்ச்சி வள்ளலாா் திடலில் அமைக்கப்பட்ட அரங்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில், அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான கே.பி.அன்பழகன், திமுக சாா்பில் தருமபுரி மக்களவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளா்களில் ஒருவருமான ஆ.மணி, நாம் தமிழா் கட்சி சாா்பில் ஒருங்கிணைப்பாளா் சந்தோஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக சாா்பில் அன்பழகன் பேசும்போது, திமுக சாா்பில் ஆ.மணி இடையிடையே பேசினாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாா்வையாளா்களாக அமா்ந்திருந்த அதிமுக தொண்டா்கள் நாற்காலிகளை தூக்கி வீசினா். இதற்கு பதிலாக திமுகவினரும் நாற்காலிகளை வீசினா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், தருமபுரி நகர காவல் நிலைய ஆய்வாளா் ரத்தினக்குமாா் உள்ளிட்டோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.