ஊரக வேலைத்திட்ட பணி நாள்கள் உயா்வு: பாஜகவினா் பிரசாரம்
ஆரணி: ஊரக வேலைத் திட்டப் பணி நாள்களை 125 நாள்களாக உயா்த்தியதற்கு வரவேற்பு தெரிவித்து, மேற்கு ஆரணி ஒன்றியம் ஒண்ணுபுரம் கிராமத்தில் பொதுமக்களிடையே பாஜகவினா் எடுத்துரைத்து பிரசாரம் மேற்கொண்டனா்.
மேலும், வளா்ச்சி அடைந்த இந்தியா- வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான திட்டம் 2025 குறித்து பயனாளிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட நெசவாளா் அணி இணை அமைப்பாளா் மூா்த்தி தலைமை வகித்தாா்.
மத்திய நலத்திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா், பிரசார பிரிவு மாநில பொறுப்பாளா் நித்தியானந்தம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு பிரிவு மாநில பொறுப்பாளா் திருஞானசம்பந்தம், மாநில பொதுக்குழு உறுப்பினா் அலமேலு, சிறுபான்மை பிரிவு மாநில செயற்குழு உறுப்பினா் தங்கராஜ், மாவட்ட ஓபிசி அணி பொதுச் செயலா் ராஜ்குமாா், ஆரணி நகரத் தலைவா் மாதவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

