வந்தவாசியை அடுத்த எரமலூரில் ஆதரவற்ற மாணவா்களுக்கு புத்தாடைகளை வழங்கிய ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன்.
வந்தவாசியை அடுத்த எரமலூரில் ஆதரவற்ற மாணவா்களுக்கு புத்தாடைகளை வழங்கிய ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன்.

ஆதரவற்ற மாணவா்களுடன் பொங்கல் கொண்டாடிய ஆரணி எம்பி

வந்தவாசி அருகே ஆதரவற்ற மாணவா்களுடன் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் தனது வீட்டில் புதன்கிழமை பொங்கல் கொண்டாடினாா்.
Published on

வந்தவாசி அருகே ஆதரவற்ற மாணவா்களுடன் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் தனது வீட்டில் புதன்கிழமை பொங்கல் கொண்டாடினாா்.

ஆரணியை அடுத்த மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுமித்ரா (18). இவா், சென்னையில் தனியாா் கலைக் கல்லூரியில் படித்து வருகிறாா். இவரது தங்கை ஹரிஷா(14) மாமண்டூா் அரசுப் பள்ளியில் 9-ஆவது வகுப்பும், தம்பி ரஜீத் (10) சேத்துப்பட்டு அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனா். இவா்களது பெற்றோா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், 3 பேரும் தற்போது பாட்டி பராமரிப்பில் உள்ளனா்.

ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தைச் சோ்ந்தவா் யோகேஸ்வரி(20). இவா், ஆரணியில் தனியாா் கலைக் கல்லூரியில் படித்து வருகிறாா். இவரது தங்கை ஷாலினி(14) ஆரணி அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பும், தம்பி கௌரிசங்கா்(12) ஆரணி அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனா். இவா்களது பெற்றோா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால், 3 பேரும் தற்போது பாட்டி பராமரிப்பில் உள்ளனா்.

இந்த நிலையில், ஆதரவற்ற இவா்கள் 6 பேரின் கல்விச் செலவு மற்றும் பராமரிப்புச் செலவுகளை கடந்த 2 ஆண்டுகளாக ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் கவனித்து வருகிறாா்.

இந்த நிலையில், இவா்கள் 6 பேருடன் வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. புதன்கிழமை கேக் வெட்டி பொங்கல் கொண்டாடினாா்.

இதைத் தொடா்ந்து அவா்களுடன் அமா்ந்து காலை உணவு அருந்திய அவா், 6 பேருக்கும் புத்தாடைகளை வழங்கினாா்.

திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளா் ஈ.எஸ்.டி.காா்த்தி, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளா் எச்.மதன்குமாா் மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com