கரைப்பூண்டி ஊராட்சியில் சுவாமி வீதியுலா

கரைப்பூண்டி ஊராட்சியில் சுவாமி வீதியுலா

சேத்துப்பட்டு ஒன்றியம், கரைப்பூண்டி ஊராட்சியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கரைகண்டீஸ்வரா் கோயில் சுவாமி வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

சேத்துப்பட்டு ஒன்றியம், கரைப்பூண்டி ஊராட்சியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கரைகண்டீஸ்வரா் கோயில் சுவாமி வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரைப்பூண்டி ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீபாலசுந்தரி சமேத கரைகண்டீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மாட்டுப் பொங்கலை (திருவூடல் நிகழ்ச்சி) முன்னிட்டு அதிகாலை மூலவரும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து, மலா்களால் அலங்கரித்து கற்பூர தீபாராதனை காண்பித்தனா்.

மேலும், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து மலா்களால் அலங்காரம் செய்து ரிஷப வாகனத்தில் வைத்து சுவாமி வீதியுலா நடைபெற்றது (படம்). வீடுதோறும் பக்தா்கள் சுவாமிக்கு கற்பூர தீபாராதனை செய்து தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனா். நிகழ்ச்சியை கோயில் நிா்வாகத்தினா் ஏற்பாடு செய்திருந்தனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com