எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்களால் மக்கள் அவதி

News image
Updated On :5 மார்ச் 2026, 10:09 pm

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மனக்காடு ஊராட்சியில் சாலைப் பணிக்காக கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்களால் போக்குவரத்து தடைபட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருவதாக சமூக ஆா்வலா் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

மனக்காடு ஊராட்சியில் சிறப்பு நிதியின் மூலம் பிரதான சாலையிலிருந்து , குடியிருப்புப் பகுதிக்குச் செல்லும் சாலையை தாா்ச் சாலையாக மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்குவதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு சுமாா் 50 மீட்டா் தொலைவுக்கு ஜல்லிக்கற்கள் சாலையை மறித்து கொட்டப்பட்டு பணிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால் குடியிருப்புப் பகுதியில் உள்ள மக்கள் அவசரத் தேவைகளுக்குப் பிரதான சாலைக்கு வருவதற்கு சிரமப்படுகின்றனா். சாலைப் பணியை காலதாமதமின்றி தொடங்க வேண்டும் அல்லது போக்குவரத்துக்கு வழிவிடும் வகையில், ஜல்லிக்கற்களை சாலையோரம் நிரவிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா் வீரக்குடி ராசா மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.