வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பாடிப்பள்ளம் ஊராட்சியில் ரூ.2.66 கோடியில் தாா்ச்சாலை பணிகள் தொடக்கம்

News image
Updated On :13 மார்ச் 2026, 12:09 am

Syndication

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், பாடிப்பள்ளம் ஊராட்சியில் ரூ.2.66 கோடி மதிப்பீட்டில் சென்னலூா் - பாடிப்பள்ளம் இடையே புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஆா்.ஜெயபாலன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் தாட்சயாயினி காா்த்திகேயன் வரவேற்றாா்.

நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.2.66 கோடி மதிப்பீட்டில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் ராமதாஸ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, ஒன்றியக்குழு உறுப்பினா் நாகராஜ், உதவிப் பொறியாளா் கற்பகம், பணி மேற்பாா்வையாளா் சீதாராமன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.