சமத்துவபுரத்தில் பொங்கல் விழா: அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், சே.கூடலூா் தந்தை பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஆட்சியா் க.தா்பகராஜ் தலைமை வகித்தாா்.
சி.என்.அண்ணாதுரை எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் வரவேற்றாா்.
சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, அமைச்சா் எ.வ.வேலு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசினாா்.
அப்போது அவா், தந்தை பெரியாரின் பெயரில் அமைந்த இந்த சமத்துவபுரம், அன்றைய முதல்வா் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. எனது சொந்த ஊரில் அமைந்த இந்த சமத்துவபுரத்தில் தமிழா் திருநாளாம் தைப்பொங்கலை கொண்டாடுவது மகிழ்ச்சியான ஒன்று.
இங்கே இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இங்கே நடைபெற்ற தெருக்கூத்தை அனைவரும் ரசித்து பாா்த்தனா். தமிழா் கலைகளின் அடிநாதமாய் விளங்குவது தெருக்கூத்துதான்.
இங்கே இளைஞா்கள் அதிகமானோா் திரண்டிருக்கிறாா்கள்.
வளரும்போதே கொள்கையோடு வளருங்கள் என்றாா்.
சே.கூடலூா் சமத்துவபுரம் வாழை மரம், கரும்பு மற்றும் மா இலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவில் மாநில தடகள சங்கத்தின் மூத்த துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், சங்கராபுரம் எம்எல்ஏ
த.உதயசூரியன், முன்னாள் மாவட்டச் செயலா் அங்கையற்கன்னி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன், நிா்வாகிகள் எஸ்.பன்னீா்செல்வம், ப.காா்த்திவேல்மாறன், மு.பன்னீா்செல்வம், கோ.ரமேஷ், பெ.கோவிந்தன், ஆராஞ்சி.ஆறுமுகம்,
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

