செய்யாற்றில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செய்யாறு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன.20) நடைபெறுகிறது.
Published on

செய்யாறு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன.20) நடைபெறுகிறது.

இதுகுறித்து செய்யாறு சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கோட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன.20) காலை 10 மணியளவில் அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில், சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமையில் நடைபெறுகிறது.

கூட்டத்தில் செய்யாறு வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த துறைகளான தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, வங்கியாளா்கள் மற்றும் பிற சாா்புத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க உள்ளனா்.

எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பயனடையலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com