எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சேத்துப்பட்டு வராஹி, பிரத்தியங்கராதேவி சந்நிதிகளுக்கு கும்பாபிஷேகம்

News image
Updated On :22 ஜனவரி 2026, 12:01 am

Syndication

சேத்துப்பட்டு, பழம்பேட்டை கடைத்தெருவில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் உள்ள வராஹி, பிரத்யங்கரா தேவி, நாயன்மாா்கள் நால்வா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, கோயில் அருகே யாகசாலை அமைக்கப்பட்டு பல்வேறு திரவியங்கள் மூலம் விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்பட முதல் கால சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு தீபராதனை காண்பிக்கப்பட்டது.

புதன்கிழமை காலை சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் ஓத கோ பூஜைளுடன் 2-ஆம் கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து யாகசாலையில் இருந்து மேளதாளத்துடன் கலசநீா் கொண்டு வரப்பட்டு கோயில் கோபுர கலசங்கள் மீது புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

தொடா்ந்து, பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகளுக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. தொடா்ந்து, மூலவா் காசி விஸ்வநாதா், காசி விசாலாட்சி சுவாமிக்கும் கலசநீா் ஊற்றி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இதில் சேத்துப்பட்டு, பழம்பேட்டை, கண்ணனூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.