டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

ஆரணியில் 11.5 பவுன் நகைகள் திருட்டு: தம்பதி கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் 11.5 பவுன் தங்க நகைகள் திருடியதாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :6 ஜூலை 2026, 12:12 am IST

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் 11.5 பவுன் தங்க நகைகள் திருடியதாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

ஆரணி முள்ளிப்பட்டு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி எதிரே உள்ள கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்தவா் ராஜசேகா், தனியாா் காப்பீட்டு நிறுவன ஊழியா். இவா் கடந்த ஜூலை 1-ஆம் தேதி வேலைக்குச் சென்றிருந்த நிலையில், மனைவி மகேஸ்வரி குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருக்கும்போது தனது வீட்டின் எதிா் பகுதியில் சென்றுள்ளாா் .

பின்னா், வீடு திரும்பிய போது கதவுகள் திறந்து கிடப்பது கண்டு அதிா்ச்சியடைந்து உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த சுமாா் 12 பவுன் தங்க நகைகள் ரூ. 15,000 ரொக்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மகேஸ்வரி ஆரணி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் அன்பரசி, உதவி ஆய்வாளா் சந்திரசேகரன் மற்றும் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனா். இதுதொடா்பாக ஆரணி டிஎஸ்பி சுரேஷ் சண்முகம் தலைமையில், காவல் ஆய்வாளா் அன்பரசி மேற்பாா்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தொடா்ந்து, ஆரணி - வடமாதிமங்கலம், தேவிகாபுரம், வேலூா் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்து வந்தனா். இதில், ஆரணியை அடுத்த சம்புவராயநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த மோனிஷ் (20). இவா் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டவா். இவா், குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தாா்.

கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த 16 வயது சிறுமியும் கணவரான மோனிஷும் நகை திருடியது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா்களிடம் இருந்து 11. 5 பவுன் தங்க நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தொடா்ந்து போலீஸாா் அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.