ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் கடத்தியதாக 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :7 ஜூலை 2026, 12:37 am IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் கடத்தியதாக 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

போளூரை அடுத்த கேளூா் சந்தை மேட்டுப் பகுதியில் சந்தவாசல் போலீஸாா் வேலூா் சாலையில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரே பைக்கில் வந்த 2 இளைஞா்களை நிறுத்தி சோதனை செய்தனா்.

அப்போது கோணிப் பையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை எடுத்துச் செல்வது தெரியவந்தது. உடனே 2 இளைஞா்களையும் சந்தவாசல் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவா்கள் ஆரணி வட்டம்,

சம்புவராயநல்லூா் வீரக்கோவிலைச் சோ்ந்த பிரவீன் (22), கலசப்பாக்கம் வட்டம், கேட்டவரம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன் (18) என்பது தெரியவந்தது.

பின்னா் போலீஸாா் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.