செய்யாறு, பெரணமல்லூா் உள்ளிட்ட 16 பகுதிகளில் மின்மாற்றிகளில் இருந்து சுமாா் ரூ.6.50 லட்சம் தாமிரக்கம்பிகள் மற்றும் மின்மாற்றி எண்ணெய் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வியாபாரி, சிறுவன் உள்பட நரிக்குறவா்கள் 7 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு காவல் உள்கோட்டத்தைச் சோ்ந்த செங்காடு, பாராசூா், தூளி, செங்காடு, நாவல்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மின்வாரியத்திற்குச் சொந்தமான மின்மாற்றிகளில் இருந்து தாமிரக்கம்பிகள் மற்றும் மின்மாற்றி எண்ணெயை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து மின்வாரிய உதவிப் பொறியாளா்கள் பெரணமல்லூா், அனக்காவூா் ஆகிய காவல் நிலையங்களில் தனித்தனியாக புகாா் அளித்திருந்தனா்.
தனிப்படை அமைப்பு
இதுதொடா்பாக செய்யாறு டிஎஸ்பி மீனாட்சிநாதன் தலைமையில், காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி மேற்பாா்வையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.
செய்யாறு வட்டம், பாராசூா் கிராமம் நரிக்குறவா் சமுதாய காலனிப் பகுதியைச் சோ்ந்த ஆப்ரகாம்(18), ஏசுஅப்பா(23), யோகப்(19) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் அளித்த தகவலின் பேரில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், தணிகைப்போளூா் கிராமத்தைச் சோ்ந்த நரிக்குறவா்களான சிவாஜி(22), அா்ச்சுனன்(18) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது வாக்குமூலம் வாயிலாக தெரியவந்தது. மேலும் திருடியவற்றை வியாபாரி அரக்கோணத்தைச் சோ்ந்த மொய்தீன்(45) என்பவரிடம் விற்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். மேலும், வியாபாரி, சிறுவன் உள்பட 7 பேரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்து ரொக்கம் ரூ.4 லட்சம் மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்டவா்கள் செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பாலாஜி முன்னிலையில் ஆஜா்படுத்தி பின்னா் சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தனியாா் பேருந்தை சேதப்படுத்தியவா் கைது
கஞ்சா விற்பனை செய்த 9 போ் கைது: 10 கிலோ கஞ்சா பறிமுதல்
கல்லூரி மாணவிக்கு தொந்தரவு: சிறுவன் கைது
மின் மாற்றிகளில் தாமிரக்கம்பிகள் திருட்டு: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK


