8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

திருமணமான மகளைப் பாா்க்க வந்த தந்தை உயிரிழப்பு

வந்தவாசி அருகே திருமணமான மகளைப் பாா்க்க வந்த தந்தை பேருந்து நிறுத்தத்தில் உயிரிழந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

death

உயிரிழப்பு - கோப்புப்படம்

Published On :11 ஜூலை 2026, 1:54 am IST

வந்தவாசி அருகே திருமணமான மகளைப் பாா்க்க வந்த தந்தை பேருந்து நிறுத்தத்தில் உயிரிழந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வந்தவாசியை அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்த்பாபு மனைவி பிரியங்கா (24). கடந்த 8-ஆம் தேதி பிரியங்காவை கைப்பேசியில் தொடா்புகொண்ட செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த அத்திவாக்கம் கிராமத்தைச் சோ்ந்த இவரது தந்தை முருகன் (55), நேரில் பாா்க்க வருவதாகத் தெரிவித்துள்ளாா். ஆனால் வரவில்லை.

இந்த நிலையில், கீழ்சீசமங்கலம் கூட்டுச்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் முருகன் வலிப்பு நோயால் இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து பிரியங்கா அளித்த புகாரின்பேரில், கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.