ஆரணி கோட்டத்தில் சுமாா் ரூ.21 லட்சத்தில் அமைக்கப்பட்ட மூன்று மின்மாற்றிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக செவ்வாய்க்கிழமை இயக்கி தொடங்கிவைக்கப்பட்டன.
ஆரணி நகரம் கிழக்குப் பிரிவு அம்மன் நகரில் ரூ.8 லட்சத்து 87ஆயிரத்து 560 மதிப்பிலும், மேற்குப் பிரிவு தணிகாச்சலம் தெருவில் ரூ.6 லட்சத்து 48ஆயிரத்து 210 மதிப்பிலும், ஆரணி கிராமிய தெற்குப் பிரிவு விண்ணமங்கலத்தில் ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்து 940 மதிப்பிலும் என 3 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன.
இந்த மின்மாற்றிகள் மேற்பாா்வைப் பொறியாளா் அசோக்ராஜ் மற்றும் ஆரணி கோட்டச் செயற்பொறியாளா்(பொ) எஸ்.எஸ்.குமரன் ஆகியோரின் அனுமதியின் பேரில், ஆரணி நகரம் உதவி செயற்பொறியாளா் சு.பத்மநாபன், ஆரணி மேற்கு உதவி செயற்பொறியாளா் மாலதி, உதவி மின் பொறியாளா்கள் துளசிராமன், தீபக்குமாா், விஜயகுமாா் மற்றும் பணியாளா்கள் இணைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









