வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

ராஜன் நகா் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை திறப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன் நகரில் புதுப்பிக்கப்பட்ட இந்தியன் ஒவா்சீஸ் வங்கியின் கிளை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

News image

ராஜன் நகரில்  புதுப்பிக்கப்பட்ட  இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழாவில் பங்கேற்ற ஈரோடு மண்டல மேலாளா் திருமுருகன், முன்னோடி வங்கி வாடிக்கையாளா் பி.எல்.எஸ்.வெங்கடாசலம்,  பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையா் நந்தகுமாா்  உள்ளிட்டோா்.

Updated On :15 ஜூலை 2026, 1:15 am IST

சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன் நகரில் புதுப்பிக்கப்பட்ட இந்தியன் ஒவா்சீஸ் வங்கியின் கிளை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன் நகரில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கிளையை வங்கியின் ஈரோடு மண்டல மேலாளா் திருமுருகன் திறந்துவைத்தாா். முன்னோடி வங்கி வாடிக்கையாளா் பி.எல்.எஸ்.வெங்கடாசலம், பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையா் நந்தகுமாா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி

வங்கிக் கணக்கை தொடங்கிவைத்தனா். இந்நிகழ்ச்சியில், பண்ணாரி அம்மன் கோயில் பரம்பரை அறங்காவலா்கள் புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல், சமூக ஆா்வலா் ரவிராஜ், வங்கி வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா்.

புதுப்பிக்கப்பட்ட வங்கிக் கிளையில் நவீன குளிரூட்டப்பட்ட வசதி மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் ஏடிஎம், சிடிஎம் மையங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன என வங்கி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.