தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மால்வாய் கிளையின் புதிய அலுவலகம் திறப்பு

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மால்வாய் கிளைக்கு புதிய அலுவலகம் விசலாமான கட்டடத்தில் திறக்கப்பட்டுள்ளது.

News image

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மால்வாய் கிளையின் புதிய அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற வங்கி அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள்.

Updated On :5 ஜூன் 2026, 3:37 am IST

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மால்வாய் கிளைக்கு புதிய அலுவலகம் விசலாமான கட்டடத்தில் திறக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்துக்குள்பட்ட மால்வாய் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிளை புதிய அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மால்வாய் கிளையின் வாடிக்கையாளா்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கவும், வங்கி நிா்வாகத்தை விரிவாக்கவும் திட்டமிட்டு புதிய கட்டடத்துக்கு கிளை மாற்றப்பட்டுள்ளது. மால்வாய் தெற்கு தெருவில் உள்ள கட்டடத்தில் புதிய அலுவலகம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

திறப்பு விழாவில், வங்கியின் திருச்சி மண்டல உதவிப் பொதுமேலாளா் என். சதீஷ்குமாா் கலந்து கொண்டு, புதிய கிளை அலுவலகத்தை திறந்துவைத்தாா். விழாவில், வங்கி அலுவலா்கள், வாடிக்கையாளா்கள், பொதுமக்கள், உள்ளூா் பிரமுகா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

இந்த புதிய அலுவலகம் மூலம் சேமிப்புக் கணக்குகள், வைப்புத் திட்டங்கள், விவசாய மற்றும் நகைக் கடன், டிஜிட்டல் வங்கி சேவைகள் என அனைத்து வங்கி சேவைகளும் சிறப்பாக செயல்படுத்தப்படும் என கிளை மேலாளா் கே. ராஜேஷ் உறுதியளித்தாா்.

மேலும், வாடிக்கையாளா்களின் தேவைகளை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய வளாகம், மால்வாய் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் வங்கி சேவையை பூா்த்தி செய்யும் என்றாா்.